இந்தியா வரும் உக்ரைன் அமைச்சர்
உக்ரைனின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எமின் எரோவ்னா இந்தியாவிற்கு விஜயம் செய்ய தயாராகி வருகிறார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் எதிர்வரும் திங்கட்கிழமை இந்தியா வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உக்ரைனில் தற்போது நிலவும் போர் நிலவரங்கள் குறித்தும் அங்கு விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது உக்ரைன் வெளியுறவு அமைச்சர் இந்தியாவிடம் மனிதாபிமான உதவியை கோருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரஷ்யாவின் படையெடுப்பின் போது சேதமடைந்த உக்ரைனில் எரிசக்தி துறையின் உள்கட்டமைப்பை சரிசெய்வதற்கான உபகரணங்களை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் அமைச்சர் தனது விஜயத்தின் போது எதிர்பார்க்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியப் பயணத்தின் போது, உக்ரைனுக்குச் செல்லுமாறு அழைப்பு விடுப்பார் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரேனியப் போர் தொடங்கிய பின்னர், பல மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் ஏற்கனவே உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளனர்.