டெலிகிராம் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தும் ஸ்பெயின்: உயர் நீதிமன்றம் உத்தரவு
அனுமதியின்றி பயனர்கள் தங்கள் உள்ளடக்கத்தை பதிவேற்ற அனுமதிப்பதாக ஊடக நிறுவனங்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, நாட்டில் செய்தியிடல் செயலியான டெலிகிராமின் சேவைகளை நிறுத்தி வைக்க ஸ்பெயின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Atresmedia , EGEDA, Mediaset மற்றும் Telefonica உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் கோரிக்கையை அடுத்து, ஸ்பெயினில் டெலிகிராம் பயன்பாடு திங்கள்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி சாண்டியாகோ பெட்ராஸ் ஸ்பெயினில் டெலிகிராமின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டார்
டெலிகிராமின் சேவைகளைத் தடுப்பது மொபைல் போன் வழங்குநர்களின் பொறுப்பாகும் என்று நீதிமன்ற வட்டாரம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கான கோரிக்கைக்கு டெலிகிராம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
போட்டி கண்காணிப்பு அமைப்பான CNMC படி, டெலிகிராம் ஸ்பெயினில் நான்காவது அதிகம் பயன்படுத்தப்படும் செய்தி சேவையாகும். CNMC ஆல் கணக்கெடுக்கப்பட்ட ஸ்பானியர்களில் கிட்டத்தட்ட 19% பேர் இதைப் பயன்படுத்தினர்.
2023 ஆம் ஆண்டில் உலகளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டிருந்ததாக நிறுவனம் கூறுகிறது