Apple நிறுவனம் மீது வழங்கு தாக்கல் செய்த அமெரிக்கா!
Apple நிறுவனம் மீது அமெரிக்காவின் நீதித் துறையும் 15 மாநிலங்களும் அதன் மீது வழக்குத் தொடுத்துள்ளன.
Apple நிறுவனம் கையடக்க தொலைபேசி சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நியூ ஜெர்சியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், Apple கையடக்க தொலைபேசிசந்தையில் அதிகாரத்தைக் கொண்டுள்ளது மற்றும் ஐபோன் மீதான கட்டுப்பாட்டை பரந்த, நீடித்த மற்றும் சட்டவிரோத நடத்தையில் ஈடுபட பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
iPhone கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்யும் Apple, சந்தையில் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக அவை குற்றஞ்சாட்டின.
சிறிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொலைபேசிகளின் விலை ஏறியுள்ளதாகவும் கூறப்பட்டது. துறையில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் Apple அதிக இலாபம் ஈட்டுவதாக அமெரிக்காவின் நீதித் துறை குறிப்பிட்டுள்ளது.
நிறுவனம் அதனுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் மற்ற நிறுவனங்களிடமிருந்தும் ஏதாவது ஒரு விதத்தில் கட்டணம் வசூலிப்பதாக அது கூறியது.
இறுதியில் வாடிக்கையாளர்களே பாதிக்கப்படுவதாக நீதித் துறை குறிப்பிட்டுள்ளது. எனினும் Apple குற்றச்சாட்டுகளை மறுத்தது.
அதிகப் போட்டித்தன்மை உள்ள சூழலில் மற்ற நிறுவனங்களிலிருந்து தனித்து நிற்க முனையும் தனது கொள்கைளுக்கு வழக்கு மிரட்டலாக அமைந்துள்ளதாக Apple குற்றம் சுமத்தியுள்ளது.