பணப் புழக்கத்தை குறைத்துள்ள சுவிஸ் மக்கள்
சுவிட்சர்லாந்தில் பணப் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரிய அளவிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளமை வெகுவாக குறைந்துள்ளது.
உதாரணமாக, சமீபத்திய மாதங்களில் சுமார் 13 மில்லியன் 1000 பிராங்க் நோட்டுகள் சுவிஸ் நேஷனல் வங்கிக்கு திரும்பி வந்ததாக சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 100 மற்றும் 200 பிராங் நோட்டுக்களும் குறைவான புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறான நிகழ்வுகளுக்கு காரணமாக சுவிட்சர்லாந்தின் குடியிருப்பாளர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் ட்விண்ட் போன்ற பணமில்லா கட்டண முறைகளை அதிகம் விரும்புவதானால் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)