டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது
கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இந்திய அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை இரவு கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏஜென்சியின் எந்தவொரு கட்டாய நடவடிக்கையிலிருந்தும் கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பதவியில் இருக்கும் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு,இந்திய அமலாக்க இயக்குநரக குழு அவரது வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமலாக்க இயக்குனரகத்தின் 12 பேர் கொண்ட குழு கலால் கொள்கை வழக்கில் சோதனை வாரண்டுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்றடைந்தது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் கைது செய்யப்பட்ட முதல் சிட்டிங் முதல்வர் என்ற பெருமையை கெஜ்ரிவால் பெற்றுள்ளார், மேலும் அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்று அவரது கட்சி தெரிவித்துள்ளது.
மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அமலாக்க இயக்குனரகத்தின் நடவடிக்கை வந்துள்ளது.