காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 90 துப்பாக்கிதாரிகளை கொன்றதாக அறிவிப்பு
காசாவின் அல் ஷிஃபா மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 90 ஆயுததாரிகளைக் கொன்றதாகவும் 160 பேரைக் கைது செய்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
போருக்கு முன்னர் காசா பகுதியின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா, இப்போது பிரதேசத்தின் வடக்கில் ஓரளவு செயல்படும் சில சுகாதார வசதிகளில் ஒன்றாகும்,
மருத்துவமனையில் இஸ்ரேலின் சோதனை திங்கள்கிழமை அதிகாலை தொடங்கியது. துப்பாக்கி ஏந்தியவர்களால் மருத்துவமனை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது என்ற உளவுத்துறையின் அடிப்படையில், காலாட்படை மற்றும் டாங்கிகளின் ஆதரவுடன் சிறப்புப் படைகளை அனுப்பியதாக இராணுவம் கூறியது.
போருக்கு முன்னர் காசா பகுதியின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா, இப்போது பிரதேசத்தின் வடக்கில் ஓரளவு செயல்படும் சில சுகாதார வசதிகளில் ஒன்றாகும், மேலும் இடம்பெயர்ந்த குடிமக்களையும் தங்க வைத்துள்ளது.
கடந்த நவம்பரில் அல் ஷிஃபா மருத்துவமனையை முதன்முதலில் துருப்புக்கள் தாக்கியபோது இஸ்ரேல் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ஹமாஸின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களாகப் பயன்படுத்தப்பட்ட சுரங்கப்பாதைகளை துருப்புக்கள் அங்கு கண்டுபிடித்தனர்.
ஹமாஸ் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மருத்துவமனை இராணுவ நோக்கங்களுக்காக அல்லது போராளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க பயன்படுத்தப்பட்டதாக மறுக்கின்றனர்.