இலங்கையில் புற்றுநோய் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

மஹரகம அஸ்திய வைத்தியசாலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கதிரியக்க சிகிச்சை வழங்கும் இயந்திரம் கடந்த பெப்ரவரி 29ஆம் திகதி முதல் செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்குப் பயன்படுத்தப்பட்ட “லீனியர் ஆக்சிலரேட்டர் இயந்திரம்” பெப்ரவரி 29ஆம் திகதி பழுதடைந்ததாகவும், இது வரையில் அது மீளமைக்கப்படவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதனால் தினமும் 10-15 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புற்றுநோய் சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் பெற, புற்றுநோயாளி ஒருவர் 7 முதல் 17 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க நேரிடுகிறது.
(Visited 27 times, 1 visits today)