சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்லும் இலங்கையர்கள்!! பொலிஸாரின் அவசர எச்சரிக்கை

பிரான்ஸிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சிக்கும் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறிய படகுகளில் பிரான்ஸை அடைய முயற்சிக்கும் மக்களிடையே உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக பிரான்ஸ் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கடந்தாண்டில் 12 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எனினும் இந்த ஆண்டு ஏற்கனவே ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
சட்டவிரோத பயணம் நீண்ட தூரம் பயணிக்கும் திறனற்ற படகுகள் மூலம் வெளிநாட்டவர்கள் பிரான்ஸிற்கு வர முயற்சிக்கின்றனர். இவ்வாறான ஆபத்தான பயணங்களை தவிர்க்குமாறு வெளிநாட்டவர்களை பிரான்ஸ் பொலிஸார் கேட்டுள்ளளனர்.
(Visited 11 times, 1 visits today)