கொழும்பில் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை

மொரட்டுவ, இந்திபெத்த, பேக்வத்த பகுதியில் பெண்ணொருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், கொல்லப்பட்ட பெண்ணின் வயது 51 என தெரிவிக்கப்படுகிறது.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த டிசம்பர் மாதம் சிறையில் இருந்த போது தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கணவரின் உறவினர் ஒருவராலேயே குறித்த பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
கொலையை செய்த சந்தேக நபர் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மொரட்டுமுல்ல பொலிஸாரிடம் வந்து சரணடைந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 20 times, 1 visits today)