உக்ரைன் இராணுவத்தில் வேலைவாய்ப்பு – ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை தம்பதி
உக்ரைன் போர்க்களத்திற்கு சம்பளம் வழங்குவதன் அடிப்படையில் பாதுகாப்புப் படைக்கு உறுப்பினர்களை அனுப்பும் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடவத்தைத பிரதேசத்தில் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த கணவன் மனைவியே இவ்வாறு கைது செய்ப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் உட்பட 45 இராணுவ வீரர்களை உக்ரைன் நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்களில் 10 பேர் உக்ரைன் போர் பிரதேசத்தில் பணிபுரிந்து சம்பளம் வழங்காமல் இந்நாட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் தொடர்பில் விசா ஆலோசகராக பணியாற்றிய பிரசன்ன கொத்தலாவல மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரைனுக்கு ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, நிவாரண சேவை குழுக்களாக நியமிக்கப்பட்டவர்களும் இந்தியா மற்றும் டுபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு, அஜர்பைஜான் மற்றும் போலந்து எல்லையில் இருந்து அந்த நாடுகள் வழியாக உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவியே இவர்களை குழுக்களாக இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஒருவரிடம் இருந்து 16 முதல் 20 லட்சம் ரூபாய் வரை வசூலித்து இந்த மோசடி நடந்துள்ளது.