பொதுமக்களுக்கு தன் கையால் உணவு பரிமாறி மக்களுடன் உண்ட மாவட்ட ஆட்சியர்

அருள்மிகு குமாரகோட்டம் முருகன் கோவிலில் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பங்கேற்பு
பொதுமக்களுக்கு தன் கையால் உணவு பரிமாறி மக்களுடன் உண்ட மாவட்ட ஆட்சியர
காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதி பகுதியில் உள்ள கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரடியாக தன் கையால் உணவு வழங்கி பின் மக்களோட மக்களாக அமர்ந்து சமபந்தி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா மக்களுடன் அமர்ந்து சமபந்தி உண்டு மகிழ்ந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மதிய உணவை அருந்தினர்.