இலங்கையில் கால அட்டவணை அடிப்படையில் நீர் விநியோகம்!
இலங்கையில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களிலுள்ள 15 நீர் வழங்கல் பகுதிகளுக்கு கால அட்டவணை அடிப்படையில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேசிய நீழ் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் – பேருவளை மற்றும் அளுத்கம
இரத்தினபுரி மாவட்டத்தின் – நிவித்திகல
குருநாகல் மாவட்டத்தின் – நாரம்மல
கண்டி மாவட்டத்தின் – கம்பலவத்த, அங்குரம்பர, புஸ்ஸல்ல, புசல்லாவை, மீவதுர, பாரதெக்க
நுவரெலியா மாவட்டத்தின் – ஹட்டன்,கொட்டகலை
மாத்தறை மாவட்டத்தின் – ஊருபொக்க
மொனராகலை மாவட்டத்தின் – புத்தல, சூரியஆர
ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நீர் வழங்கல் கட்டமைப்பில் பிரச்சினை எழுந்துள்ளது
அதற்கு தீர்வாக குறித்த பகுதிகளுக்கு கால அட்டவணை அடிப்படையில் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.
இதுவரை கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுகின்றது
கொழும்பு மற்றும் களுத்துறை நீர் விநியோகக் கட்டமைப்பின் பகுதிகளுக்கு குறைந்த அழுத்த நீரே விநியோகிக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்தார்.
தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, வாதுவ மற்றும் வஸ்கடுவ ஆகிய பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீரை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால், எதிர்வரும் நாட்களில் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் கால அட்டவணை அடிப்படையில் நீர் விநியோகத்தை முன்னெடுக்க நேரிடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்தார்.