பிரான்ஸில் பாடசாலை அதிபருக்கு அதிர்ச்சி கொடுத்த மாணவன்

பிரான்ஸில் பாடசாலை அதிபருக்கு கத்தி ஒன்றின் மூலம் அச்சுறுத்தல் விடுத்த மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 15ஆம் திகதி உயர்கல்வி பாடசாலையின் அதிபரின் அறைக்குள் ஆயுதத்துடன் நுழைந்த 15 வயதுடைய மாணவன் ஒருவர், அவரைக் கொண்டுவிடுவேன் என அச்சுறுத்தியுள்ளார்.
பின்னர் மாணவன் அங்கிருந்து வெளியே ஓடி தப்பிச் செல்ல, அதிபர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
விரைந்து வந்த காவல்துறையினர் அனைத்து மாணவர்ககையும் வகுப்பறைக்குள் தனிமைப்படுத்திவிட்டு, குறித்த அச்சுறுத்தல் விடுத்த மாணவனைக் கைது செய்தனர்.
குறித்த மாணவன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதேபாடசாலையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டவர் என அறிய முடிகிறது.
(Visited 12 times, 1 visits today)