இலங்கையில் கடும் வெப்பமான காலநிலை : மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.
இந்நிலைமையால் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குருநாகல், இரத்தினபுரி, அநுராதபுரம் மாவட்டங்களில் நேற்று (15.03) கடும் வெப்பமான காலநிலை காணப்பட்டது.
கடும் வெப்பமான காலநிலையுடன் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால் தோலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு தோல் எரியும் தன்மையை இங்கு காணலாம்.
தோலில் வெள்ளைப் புள்ளிகள் இருப்பது, தோல் அரிப்பு, வியர்வையால் சீழ் கொப்புளங்கள், வியர்வை தேங்கி மார்பகங்களில் உருண்டை வடிவ பூஞ்சை போன்றவை ஏற்படுவதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கூடுதலாக, தற்போதுள்ள தோல் ஒவ்வாமை அதிகரிப்பு வெப்பமான காலநிலையுடன் ஏற்படலாம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக இளம் பிள்ளைகள் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இது குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவது கட்டாயம் என்றும் தோல் நோய் நிபுணர் டாக்டர் இந்திரா கஹவிட்ட தெரிவித்தார்.
“குறிப்பாக பூஞ்சை தொற்று ஏற்பட்டால், மருந்தகத்திற்குச் சென்று மருந்து கொடுக்கச் சொல்லாதீர்கள். பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தால், பூஞ்சை நம் சிகிச்சைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும். ஆகவே முறையான சிகிச்சை பெறவும்.” எனக் கூறியுள்ளார்.