இலங்கையில் கடும் வறட்சி – நீர் விநியோகம் பாதிப்பு
இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நீர் விநியோகம் 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராய்ச்சி இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, 06 நீர்வடிகாலமைப்பு முறைமைகளின் ஊடாக நீர் விநியோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குளத்து நீர் மாசடைவதால் களனி கங்கை ஊடாக தற்காலிக தடுப்பு அணை அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக களு கங்கையின் நீரை சுத்திகரிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.