ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து செயல்பட தீர்மானம்!

ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனம் மின்சார வாகனங்களின் உற்பத்தியை மேம்படுத்துவதுடன், தன்னாட்சி தொழில்நுட்பத்தை சேர்க்கவும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இரு நிறுவனங்களின் தலைவர்களும் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய கார் உற்பத்தியாளர்களான இரு நிறுவனங்களும், எதிர்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மின்சார வாகனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 21 times, 1 visits today)