இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்!

காவல்துறையின் கூற்றுப்படி, 2024 ஜனவரி 1 முதல் மார்ச் 12 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா மேலும் தெரிவித்தார்.
(Visited 27 times, 1 visits today)