பிரான்ஸ் தலைநகரில் இருந்து வெளியேற்றப்பட்ட 400 அகதிகள்
பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, தலைநகர் பாரிசில் உள்ள அனைத்து அகதிகளையும் வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுவரை பல நூறு அகதிகள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், மேலும் 400 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக சென் நதிக்கரைகளில் தங்கியிருந்த 400 வரையான அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேம்பாலத்தின் கீழே சிறிய கூடாரங்களை அமைத்து அகதிகள் படுத்துறங்கும் நிலையில், அவர்களை Utopia56 எனும் அமைப்புடன் இணைந்து பொலிஸார் புதன்கிழமை காலை வெளியேற்றினர்.
அவர்கள் இல் து பிரான்ஸின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
(Visited 10 times, 1 visits today)