திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவர் உயிரிழப்பு!

இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் மெதடிஸ்த மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
போட்டியின் போது திடீரென சுகவீனமடைந்த மாணவி சிகிச்சைக்காக திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே திருக்கோவில் வைத்தியசாலையில் மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக்கூறி பிரதேசவாசிகள் வைத்தியசாலைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
(Visited 10 times, 1 visits today)