வங்காள விரிகுடாவை நோக்கி பயணிக்கும் சீன உளவு கப்பல் : இந்தியாவிற்கு எச்சரிக்கை!
சீன இராணுவ ஆராய்ச்சி-கண்காணிப்பு கப்பலான சியாங் யாங் ஹாங் 3 தற்போது மாலே துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நிலையில், மற்றொரு சகோதரக் கப்பலான சியாங் யாங் ஹாங் 01 இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த கப்பல் தற்போது வங்காள விரிகுடாவை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
01 கப்பலில் பட்டியலிடப்பட்ட இலக்கு எதுவும் இல்லை என்பதால், உளவுக் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு செயல்பாட்டுத் திருப்பத்திற்காக (OTR) இணைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு உள்ளீடுகள் குறிப்பிடுகின்றன.
கடந்த டிசம்பர் 22, 2023 அன்று, ஆய்வுக் கப்பல்களுக்கு எதிராக ஒரு வருட கால அவகாசத்தை இலங்கை பிரகடனப்படுத்திய போதிலும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அவை தரித்து நிற்கக்கூடும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.