தோனி பிரபல தத்துவமேதை சாணக்யரின் வம்சம்…? – ஆய்வு புகைப்படம் வைரல்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தோனியைப் போன்ற உருவ அமைப்பில் தான் தத்துவஞானி சாணக்யரின் உருவம் இருந்திருக்கும் என்று 3டி வடிவில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
தத்துவமேதை சாணக்யரின் வம்சத்தைச் சேர்ந்தவராக தோனி இருந்தாலும் சந்தேகப்படுவதற்கில்லை என்று ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
மகாதா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அர்த்தசாஸ்திரம் புத்தகத்தை எழுதிய பிரபல ஆசிரியர், எழுத்தாளர், தத்துவஞானி, பொருளாதார நிபுணர், சட்ட வல்லுநர் மற்றும் சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் அரச ஆலோசகராக பணியாற்றிய சாணக்யரின் உருவத்தை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி இருந்தனர். இந்த உருவம், அச்சு அசலாக பார்ப்பதற்கு தோனியைப் போலவே இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் எழுதப்பட்ட சாணக்யரின் அரசியல் தத்துவ சிந்தனைகளை உள்ளடக்கிய அர்த்தசாஸ்திரம் நூல் இன்று வரை வாசகர்களால் சிலாகிக்கப்படுகிறது. தனது துறையில் எவராலும் வீழ்த்த முடியாத ஜாம்பவானாக சாணக்யர் விளங்கினார். உருவ ஒற்றுமை மட்டுமல்லாமல் இது போன்ற ஒற்றுமைகளும் சாணக்யருக்கும், தோனிக்குமிடையே இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்பாகவே கிரிக்கெட் ரசிகர்களும், வர்ணனையாளர்களும் தோனியை கிரிக்கெட்டின் ‘சாணக்யா’ என்று அடிக்கடி அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கடினமான சூழ்நிலைகளில் பதற்றப்படாமல், மிஸ்டர் கூல் கேப்டன் என்கிற சாணக்யத்தனம் தோனிக்கே உரியது. சிஎஸ்கே கேப்டன் தோனியின் புத்திசாலித்தனமான மூளை, நம்பமுடியாத முடிவெடுக்கும் திறன்கள் என சாணக்யரோடு ஒப்பிட்டு வருகிறார்கள்.
நன்றி – kamadenu.hindutamil