போர் நிறுத்தம் இன்றி காசாவில் புனித ரமலான் மாதம் தொடங்கியது
காசாவில் போர் நிறுத்தம் நடைபெறாமலேயே ரமலான் மாதம் தொடங்கியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், ரமலான் மாதம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கிய யுத்தத்தில் இஸ்ரேலின் 1200 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
போர் காரணமாக பாலஸ்தீனத்தில் கடுமையான பசியும் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போர் நிறுத்தத்தை அறிவிக்க எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
(Visited 40 times, 1 visits today)





