ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு – கடுமையான அழுத்தத்தில் முதியோர்கள்

ஆஸ்திரேலியாவின் முதியோர்களில் 80 வீதமானோர் வாழ்க்கைச் செலவினங்களின் வேகமான அதிகரிப்பால் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

அடுத்த 12 மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது ஆஸ்திரேலியா முழுவதையும் உள்ளடக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வயதுக்கு மேற்பட்ட 5,700 பேரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள், எரிபொருள் மற்றும் சுகாதாரச் செலவுகள் உள்ளிட்ட எரிசக்திக் கட்டணங்கள் முக்கியப் பிரச்சினைகளாக இருப்பதாகவும், வீட்டுவசதிப் பிரச்சினையும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு விடயம் எனவும் கணக்கெடுப்பில் பங்களித்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொலைதூர பிரதேசங்களில் வசிக்கும் மக்களும், குறைந்த வருமானம் கொண்டவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்ட மக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை அதிகரிக்காமல், காலாண்டுக்கு ஒருமுறை அதாவது வருடத்திற்கு 04 முறை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!