தேயிலைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்ட்ட 17 வயது யுவதியின் சடலம்

தேயிலை தோட்டத்தில் 17 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த யுவதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரந்தெனிய, மந்தகந்த, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நதீஷானி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கரந்தெனிய, தல்கஹாவத்தை, கங்கபாறை பிரதேசத்தில் வைத்து நேற்று (08) முச்சக்கர வண்டியில் வந்த குழு ஒன்றினால் பலவந்தமாக யுவதி அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 23 times, 1 visits today)