பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் கிடைத்த கௌரவம்!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாரான சுதா மூர்த்தி இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
73 வயதான அவர், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனரான என்ஆர் நாராயண மூர்த்தியின் மனைவியாவார்.
இந்தியாவின் மேலவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஜனாதிபதியின் அறையில் பணியாற்ற 06 பேர் பரிந்துரைக்கப்படுவார்கள். அவ்வாறு பரிந்துரைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் உயர் சாதனையாளர்களாக காணப்படுவர்.
இதன் அடிப்படையிலேயே சுதா மூர்த்தி ஆறுவருடம் பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது குறித்து X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருமதி மூர்த்தியின் “சமூக பணி, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.