வட அமெரிக்கா

கனடாவில் கர்ப்பிணி பெண் மற்றும் கணவர் கொலை – சிக்கிய மூவர்

கனடாவின் Bowmanville பகுதியில் கடந்த வருடம் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கில் மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 28 வயதான Aram Kamel மற்றும் 26 வயதான Rafad Alzubaidy ஆகியோர் Bowmanville பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவர் சடலமாக கண்டறியப்பட்டனர்.

டர்ஹாம் பிராந்திய பொலிஸார் நலம் விசாரணைக்காக சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது கண்டறியப்பட்டது. 26 வயது பெண்ணான அல்சுபைதி கொலை செய்யப்பட்ட சமயத்தில் ஆறு மாத கர்ப்பிணியாகும்.

மிக நெருங்கிய தூரத்தில் இருந்து பலமுறை சுடப்பட்டதில் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கைது மற்றும் குற்றச்சாட்டு இந்த குற்றச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட Toronto பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் மேலும் ஒருவர் என 3 பேரும் இந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது இரண்டு முதல் நிலை கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் பொலிஸார் இதுவரை குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களையும் அடையாளம் காட்டவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்