மிரிஸ்ஸ கடலில் அடித்துச் செல்லப்பட்ட இத்தாலிய பெண்!
மிரிஸ்ஸ கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் நீராடச் சென்ற பெண் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்குட்பட்ட உயிர்காப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் இவர் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சார்ஜன்ட் 72167 மஞ்சுளா, பொலிஸ் கான்ஸ்டபிள் 20373 லஹிரு மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 19407 லக்ஷன் ஆகியோரினால் வெளிநாட்டுப் பெண் மீட்கப்பட்டுள்ளார்.
47 வயதான இத்தாலிய பெண் ஒருவரே விபத்தில் சிக்கியுள்ளார்.





