இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன்படி நாளொன்றுக்கு 500 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 524 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
கடந்த நவம்பர் 19 ஆம் திகதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 556 ஆக இருந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் 500-ஐ தாண்டி உள்ளது.
நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 114 பேரும், கர்நாடகாவில் 102 பேரும், கேரளாவில் 87 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 90 ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 311 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரத்து 93 ஆக உயர்ந்து உள்ளது.
தொற்று பாதிப்புடன் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது 3,618 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 212 அதிக மாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.