இலங்கை

கொழும்பில் 5 நட்சத்திர ஹோட்டலுக்கு நண்பருடன் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த தனது வர்த்தக நண்பரின் பையில் வைத்திருந்த 50 லட்சம் ரூபா பணத்துடன் மற்ற நண்பர் தப்பிச் சென்றுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்ற முறைப்பாட்டாளரான வர்த்தகரும் அவரது நண்பரும் பாடசாலையில் இருந்தே நண்பர்களாக இருந்தவர்களாகும்.

வாகனம் ஒன்றை வாங்க வந்த இருவரும் ஹோட்டல் அறையில் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வர்த்தக நண்பர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தூங்கியதையடுத்து சந்தேகநபர்பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முறைப்பாடு செய்த வர்த்தகர் கஹவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், தப்பிச் சென்ற சந்தேகநபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எல்.துஷ்மந்தவின் பணிப்புரைக்கமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பொலிஸ் பரிசோதகர் மனதுங்க உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!