ஜெர்மனியில் பணி செய்ய வரும் வெளிநாட்டவர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனியில் பணி செய்ய வரும் வெளிநாட்டவர்களுக்கான சம்பளம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் வெளிநாடுகளில் இருந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை உள்வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜெர்மனியில் தொழிற்பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது தொழில் நிறுவனங்களினால் சாதாரண தொழில் பயிற்சிக்கு அடிப்படை சம்பளமாக
முதலாம் வருடத்தில் 644 யூரோக்களும், இரண்டாலது வருடத்தில் 766 யூரோக்களும், மூன்றாவது வருடத்தில் 876 யூரோக்களும் வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் மருத்துவ தாதி தொடர்பான பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது பல நிறுவனங்கள் முதலாவது வருடத்துக்கு 980 யூரோக்களும் இரண்டாவது வருடத்துக்கு 1040 யூரோக்களும், மூன்றாவது வருடம் 1140 யூரோக்களும், வழங்குகின்றார்கள்