ஐரோப்பா

ஜெர்மனியில் மில்லியன் கணக்கான பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்!

ஜேர்மனி முழுவதும் மில்லியன் கணக்கான பயணிகள் இன்று (07.03) கடுமையான போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மன் விமான நிலைய ஊழியர்கள் இன்று பணிப்புறுக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்படி ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நாட்டில் உள்ள அனைத்து நீண்ட தூர ரயில்கள் மற்றும் பிராந்திய மற்றும் பயணிகள் ரயில்களில் சுமார் 80% ரத்து செய்யப்பட்டன.

அதேபோல் ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சாவின் தரை ஊழியர்கள் அதிகாலையில் வேலை செய்வதை நிறுத்தியதால் விமானப் பயணமும் பாதிக்கப்பட்டது.

இந்த வேலைநிறுத்தங்களால் நகரங்களில் நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

விமான பயணிகள் தங்கள் டிக்கெட்டுக்களை மறுபதிவு செய்ய தீவிரமாக முயற்சித்த நிலையில், வாடகை கார்கள் கிடைக்காமை அல்லது பற்றாக்குறை பெரும் சிரமங்களை கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஒரு நாளைக்கு சுமார் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், சுமார் 200,000 விமானப் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் லுஃப்தான்சா வாரத்தின் தொடக்கத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்