பாகிஸ்தானை உலுக்கிய பனிப்பொழிவு – 35 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வார இறுதியில் சில வட்டாரங்களில் திடீர் பனிப்பொழிவு ஏற்பட்டு, கனமழை பெய்தது. அதில் 35 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களி்ல 22 பேர் சிறுவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானவர்களின் வீடுகள் நிலச்சரிவில் புதையுண்டதாகப் பேரிடர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாலைகளும், வீடுகளும் பாதிக்கப்பட்டன. சில மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவை இருளில் மூழ்கின.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வழக்கமாகப் பாகிஸ்தானில் மார்ச் மாதத்தில் மிகக் குறைந்த அளவில்தான் பனிப்பொழிவு ஏற்படும்; ஆனால் இம்முறை ஏற்பட்ட பனிப்பொழிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரம் முழுவதும் பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் குளிர், வறண்ட வானிலை நிலவும் என்று வாரந்திர முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. பாலுசிஸ்தான், காஷ்மீரின் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.