ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஏல காலத்தை நீட்டிக்க நடவடிக்கை!
மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது.
இதன்படி இன்றுடன் முடிவடையவிருந்த விலைமனு அழைப்பை 45 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அரசாங்க நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய 510 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளதாகவும், பின்னர் விமான சேவைக்கான புதிய முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
(Visited 1 times, 1 visits today)