ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த மீனுக்குள் சிக்கிய மர்ம பொருளால் அதிகாரிகள் அதிர்ச்சி
ஐரோப்பிய நாடுகளுக்குப் போதைப் பொருள் கடத்தும் முயற்சியை போர்ச்சுகல் அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
லிஸ்பன் துறைமுகத்தில் உள்ள கிடங்கில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. உறையவைக்கப்பட்ட மீனில் 1.3 டன் கொக்கேய்ன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
போதைப் பொருளைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமமாக இருந்ததாக அதிகாரிகள் கூறினர். அதை அகற்ற மீன்களைச் சிதைக்கவேண்டியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் ஆயுதங்கள், சொகுசு கார்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
26 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 7 ஆடவர்கள் தடுத்துவைக்கப்பட்டனர். லத்தின் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு விநியோகிக்கும் குழுமம் ஒன்றில் அவர்கள் செயல்படுவதாக நம்பப்படுகிறது.
உலகெங்கும் கொக்கேய்னுக்கான விநியோகம் அதிகரிப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கட்னத ஆண்டு தெரிவித்திருந்தது.