ஆஸ்திரேலியாவை தொடர்ந்து ஹைதராபாத்தை வழிநடத்தவுள்ள கம்மின்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத். கடந்த 2023 சீசனில் அந்த அணியின் கேப்டனாக தென்ஆப்பிரிக்காவின் எய்டன் மார்கிராம் செயல்பட்டார். இவரது தலைமையில் அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை.
இந்த நிலையில் 2024 சீசனுக்கான அணியின் கேப்டன் பெயரை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரும், அந்த அணியின் கேப்டனுமான பேட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுவார் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் தெரிவித்துள்ளது.
பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது வீரர் இவராவார்.
இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)