ஒரு தசாப்தத்திற்கு முன் மாயமான MH370 ஐ கண்டுப்பிடிக்க மீண்டும் நடவடிக்கை!
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படும் தெற்கு இந்தியப் பெருங்கடலில் புதிய தேடுதலை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் முன்மொழிந்ததை அடுத்து, MH370 வேட்டையை புதுப்பிக்கலாம் என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
டெக்சாஸை தளமாகக் கொண்ட ஓஷன் இன்ஃபினிட்டி தேடுதல் குறித்த முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
விமானத்தின் இறுதி தங்குமிடத்தைக் கண்டறிய அறிவியல் சான்றுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் நம்பகமானதாக இருந்தால், தேடுதல் பணியை மீண்டும் தொடங்க ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவேன் என மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறியுள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற போயிங் 777 விமானம், மார்ச் 8, 2014 அன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து மாயமானது. தெற்கு இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளானது.
கிழக்கு ஆபிரிக்கக் கடற்கரை மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளில் குப்பைகள் கரை ஒதுங்கினாலும், விலையுயர்ந்த பன்னாட்டு அரசாங்கத் தேடுதலில் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.