இலங்கையில் என்ன பிரச்சினைகளும் இருந்தாலும் விவசாயிகளுக்கு துணை நிற்போம் – ரணில் அறிவிப்பு!
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்கள் பல இருந்தாலும், விவசாய சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை, கலமதியா பிரதேசத்தில் இடம்பெற்ற நெல் அறுவடை நிகழ்வில் கலந்து கொண்ட கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)





