அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வெட்கக்கேடான பகல் துப்பாக்கிச் சூட்டின் தாக்குதலாளிகள் சம்பவ இடத்திற்கு வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மீட்டுள்ளனர்.
அஹுங்கல்ல, கரிஜ்ஜபிட்டிய பகுதியில் உள்ள பாலம் ஒன்றிற்கு அருகில் உள்ள கால்வாயில் மோட்டார் சைக்கிள் மூழ்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் பிரபல குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ்கொட சுஜீயின் உறவினர் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
உயிரிழந்த 45 வயதான குசும் குமார மெண்டிஸ் என அழைக்கப்படும் “மஞ்சு” என்பவர் கொஸ்கொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியாக செயற்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 17 times, 1 visits today)