முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா புற்றுநோயால் உயிரிழப்பு

முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா, ரிங்கி சக்மா புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 28.
கடந்த மாதம், ரிங்கி சக்மா, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார்.
முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா அழகியான ரிங்கி சக்மா கடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி காலமானார்.
இது சார்ந்து ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போதிலும் அவரால் அந்த நோயிலிருந்து மீளமுடியாமல் இறந்துபோனார்.
ரிங்கி சக்மா இறப்பை குறித்து ஃபெமினா மிஸ் இந்தியா நிறுவனம், சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையைப் பகிர்ந்துள்ளது.
அதில், சக்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து, ‘இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கல்’ என குறிப்பிட்டது.
(Visited 15 times, 1 visits today)