திவுலபிட்டிய நகரில் இளம் பெண் மீது கத்திக்குத்து தாக்குதல்
திவுலபிட்டிய நகரில் 26 வயதுடைய பெண்ணொருவர் திருமணமாகாத ஒருவரால் கத்திக் குத்து தாக்குதலுக்கு இக்காகியுள்ளார்.
திவுலபிட்டிய நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் 26 வயதுடைய பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் திவுலபிட்டிய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி திரு.சந்திரசிறி ஹிரியதெனிய மற்றும் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் போது, வாள்வெட்டுக்கு இலக்கான பெண்ணின் தெரிந்த ஆண் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஆணும் பெண்ணும் கம்பஹா உடுகம்பல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், காயமடைந்த பெண் தற்போது கம்பஹா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக திபுலப்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நபர் பெண்ணின் வயிற்றிலும் மார்பிலும் கத்தியால் குத்தியதாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தியால் குத்திய நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக திவுலபிட்டிய பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி ஹேமா லியனகே தெரிவிக்கின்றார்.