காசா பகுதியில் உதவித் தொடரணிக்கு அருகில் துப்பாக்கிச்சூடு – நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

காசா பகுதியில் உதவித் தொடரணிக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் நெரிசலில் சிக்கி 112 பாலஸ்தீன அகதிகள் உயிரிழந்துள்ளதுடன் 760 பேர் காயமடைந்துள்ளனர்.
காஸா பகுதிக்கு உதவிகளை கொண்டு வந்த லொறிகளுக்கு அருகில் திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூடு, நெரிசல் மற்றும் லொறிகள் மீது மோதியதில் மக்கள் உயிரிழந்து காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது இஸ்ரேல் நடத்திய படுகொலை என்று பலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையும் அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
(Visited 39 times, 1 visits today)