வருடத்தின் இரு மாதங்களில் பதிவான மனிதக் கொலைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மனிதக் கொலைகள் தொடர்பான சம்பவங்களில் 83 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் 310 கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)





