சிலாபத்தில் புகையிரத பாதையை மறித்து மக்கள் போராட்டம்!

கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து, பிரதேசவாசிகள் புகையிரத பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் புகையிரதம் புத்தளத்திற்கும் சிலாபத்துக்கும் இடையில் உள்ள புலிச்சகுளத்தில் நிறுத்தி கொழும்பு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முற்றுகையால் புகையிரதம் ஸ்தம்பிதம் அடைந்ததுடன், அதன் பயணத்திற்கு இடையூறு ஏற்பட்டதோடு, கொழும்பு – கோட்டையிலிருந்து சிலாபம் வரையிலான பாதையில் பயணிக்கும் பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.
(Visited 20 times, 1 visits today)