ஜப்பானில் குறையும் மக்கள் தொகை – 8-வது ஆண்டாக பிறப்பு விகிதாச்சாரம் சரிவு
ஜப்பானில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பிறப்பு விகிதாச்சாரம் சரிந்துள்ளதனால் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதாச்சாரம் 5 சதவீதமும், திருமண விகிதம் 6 சதவீதமும் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக தாய்மார்களுக்கு ஊதியத்துடன் ஓராண்டு விடுப்பு, குழந்தைகள் பராமரிப்புக்காக மாதா மாதம் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு சலுகைகளை ஜப்பான் அரசு வழங்கிவருகிறது.
(Visited 10 times, 1 visits today)