இலங்கை செய்தி

மீண்டும் களத்திற்கு வந்த கோட்டாவின் ஆஸ்தான சோதிடர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் ஆஸ்தான சோதிடரான ஞானா அக்கா எனும் பெண் மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விரட்டியடிக்கப்பட்ட பின்னர், ஞானா அக்காவுக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடு தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், சிறிது காலம் தலைமறைவாக இருந்தார்.

எனினும், தற்போது மீண்டும் சோதிடம், சாந்தி கர்மம் போன்றவற்றில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில அரசியல்வாதிகளும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் தமது எதிர்கால இலக்குகளை அடைவதற்காக ஞானா அக்காவைக் கொண்டு யாகமொன்றை மேற்கொள்ள கடந்த ஒரு மாத காலமாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!