ஸ்மார்ட் மோதிரம் வெளியிட தயாராகும் Samsung!
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது முதல் அணியக்கூடிய ஸ்மார்ட் மோதிரத்தை பார்சிலோனாவில் உள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் என்ற நிகழ்வில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம் கலிபோர்னியாவில் நடந்த கேலக்ஸி எஸ் 24 சீரியஸ் வெளியிட்டு நிகழ்வில் கேலக்ஸி மோதிரம் கிண்டலுக்கு உள்ளான நிலையில், தற்போது முதல் முறையாக பொது வெளியில் காண்பிக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது.
இந்த டெக்னலாஜி உலகில் டேப்லெட், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி போன்ற பல தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட சாதனங்களை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது சாம்சங் நிறுவனம், புதிய முயற்சியாக முதல் முறையாக தனது ஸ்மார்ட் மோதிரத்தை வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட் மோதிரம் தயாரிப்பில் தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில், தனது ஸ்மார்ட் மோதிரத்தை பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த Galaxy Ring-ஆனது செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றத்தால் பயனர்களுக்கு பல அனுபவங்களை வழங்குகிறது என்று சாம்சங் தெரிவித்துள்ளது. சாம்சங்கின் ஸ்மார்ட் மோதிரம் மைக்ரோபிராஸசர் கோடுகளுடன் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் மோதிரத்தின் மூலம், உடலின் இதயத்துடிப்பு, நடக்கும் வேகம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை ஹெல்த் சார்ந்த விஷயங்களை துல்லியமாக கணிக்க முடியும் என்றும் இந்த தகவல்களை மோதிரத்துடன் இணைக்கபட்டுள்ள கணினி அல்லது ஸ்மார்ட் போன் வாயிலாக பார்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
எனவே, Galaxy Ring-இன் அதிகாரப்பூர்வ வெளியீடு 2024ம் ஆண்டின் பிற்பகுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வரும் நாட்களில் சாம்சங் நிறுவனம் வெளியிடவுள்ள புதிய தொலைபேசி மற்றும் அதன் புதிய சாதனங்களுடன் இந்த ஸ்மார்ட் மோதிரமும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.