திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் சமயப் பெரியார்கள் இடையே பேச்சுவார்த்தை
திருகோணமலை- திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் சமயப் பெரியார்கள் முன்னிலையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகிகளுக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வழக்கினை இணக்கப்பாட்டுடன் விரைவாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் சமயப் பெரியார்களான திருகோணமலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் ஆதினகர்த்தா ரவிச்சந்திர குருக்கள் தென்கையிலை ஆதீனம் அகஸ்தியர் அடிகளார் குருமகா சன்றிதானம் மற்றும் இளையமடம் திருமூலர் தம்பிரான் அடிகளார் ஆகிய மூன்று சைவ பெரியார்களுக்கும் சுரேஷ் சட்டத்தரணி ராமலிங்கம் திருக்குமாரநாதன் ஆகியோருக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
கலந்துரையாடல் முன்னேற்றகரமாக அமைந்ததுடன் கலந்துரையாடலில் பங்கு கொண்ட நான்கு பெரியார்களுக்கும் திருப்தி அளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை தொடர் கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை திருக்கோணேஸ்வரா ஆலய பரிபால சபையின் தலைவருடன் இடம்பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது