ட்ரம்ப் புடினைப் புரிந்து கொள்ளவில்லை: ஜெலென்ஸ்கி
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால், “அமெரிக்கர்களுக்கு எதிராக” இருப்பார் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“டொனால்ட் டிரம்ப் புட்டின் பக்கம் எப்படி இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை” எனவும் தெரிவித்துளளார்.
தென் கரோலினா குடியரசுக் கட்சியின் பிரைமரியில் வெற்றி பெற்ற பின்னர் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான விளிம்பில் இருக்கும் டிரம்ப், போரில் ரஷ்யா அல்லது உக்ரைன் வெற்றி பெற விரும்புவாரா என்று கூற மறுத்துவிட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரே நாளில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று கூறியுள்ள டிரம்ப் – புடினின் குறிக்கோள்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நம்புவதாக ஜெலென்ஸ்கி கூறினார்.
மேலும் டொனால்ட் டிரம்பிற்கு புடினை தெரியாது என்று நான் நினைக்கிறேன், அவர் அவரை சந்தித்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் புட்டினுடன் சண்டையிட்டதில்லை அமெரிக்க இராணுவம் ரஷ்யாவின் இராணுவத்துடன் ஒருபோதும் சண்டையிட்டதில்லை. எனவும் ஜெலென்ஸ்கி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
“புடின் ஒருபோதும் நிறுத்த மாட்டார் என்பதை அவர் புரிந்து கொண்டதாக நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
போரைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதற்கு ரஷ்யா “பில்லியன்கள்” செலவழிக்கிறது என்றும், தவறான தகவலை ஆயுதமாகப் பயன்படுத்தி அமெரிக்காவில் விவாதத்தில் செல்வாக்கு செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.