வட அமெரிக்கா

கனடா- அடைக்கலம் கோரி குளிரில் காத்திருந்த ஏதிலிப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!

கனடாவில் கடும் குளிரில் காத்திருந்த பெண் ஏதிலிக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏதிலி முகாமொன்றில் தங்கியிருப்பதற்காக காத்திருந்த நிலையில் குறித்த பெண் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கென்யாவைச் சேர்ந்த 46 வயதான நான்கு பிள்ளைகளின் தாயான டெல்பினா நிகி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மிஸ்ஸிசாகாவில் ஏதிலி முகாமொன்றில் அடைக்கலம் பெற்றுக் கொள்வதற்காக குளிரில் வெளியே காத்திருந்த நிலையில் இவ்வாறு பெண் உயிரிழந்துள்ளார்.

ஏதிலிக் கோரிக்கையாளர்கள் நீண்ட நேரம் குளிர்ந்த காலநிலையில் வெளியே காத்திருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நீண்ட நேரம் வெளியேற கடும் குளிரில் காத்திருந்த பெண், இறுதியில் முகாமிற்கு அழைத்துச் சென்ற போதிலும் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் ஏதிலிக் கோரிக்கையாளரின் சடலத்தை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க நிதி திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்கு கூடுதல் அளவில் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 21 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்