அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் டிரம்ப் முன்னிலை
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
அக்கட்சியின் வேட்பாளர் தேர்வில், டிரம்புக்கு அதிக ஆதரவு உள்ளது. எனவே, அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் பதவிக்கு இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர் தேர்வுக்கான தேர்தலில் தெற்கு கரோலினா மாகாணத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியான முன்னாள் மாகாண கவர்னர் நிக்கி ஹாலே மற்றும் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.